“இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்திய அணியின் 15 வயது தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சுரேகர் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் நடைபெற்ற ஒருநாள் முத்தரப்புத் தொடரின் சூப்பர் ஓவர் வெற்றிக்குப் பிறகு, இலங்கை ‘ஏ’ வீரர் விஷன் ஹலம்பேஜ் தெரிவித்த ஆத்திரமூட்டும் கருத்து சூர்யவன்ஷியுடன் கைகலப்பு ஏற்படும் நிலைக்கு வழிவகுத்தது.

இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட மஞ்சுரேகர், தான் இந்தியா ‘ஏ’ அணியின் பயிற்சியாளராகவோ அல்லது மேலாளராகவோ இருந்திருந்தால், களத்தில் உடல்ரீதியான மோதல்கள் பொருத்தமற்றவை என்பதை உணர்த்துவதற்காக ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிக்கு எதிரான போட்டியில் இருந்து சூர்யவன்ஷியை நீக்கியிருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

<a href=”http://

“>

இந்த விவகாரத்தில் போட்டி நடுவர் பிரதீப் ஜெயபிரகாஷ் இலங்கை வீரர் மீது நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், சூர்யவன்ஷி மற்றும் கேப்டன் திலக் வர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள் வெறும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார்களா அல்லது அவர்கள் மீது அதிகாரப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.