தமிழ்நாட்டின் ஸ்ரீ வரம்தரும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோயில் திருவிழாவின் போது, பக்தர்களுக்கு ‘பிடிக்காசு’ எனப்படும் புனித நாணயங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளன.
பொதுவாகக் கோயில்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம், ஆனால் இங்குப் பிரசாதமாகப் பணம் வழங்கப்படுவது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் பூசாரி ஒருவர் வாயில் சுருட்டு வைத்தபடி பக்தர்களுக்கு நாணயங்களை விநியோகிப்பதைக் கண்டு இணையவாசிகள் பலரும் அதிர்ச்சியடைந்து “இதையெல்லாம் மூடுங்கள்” எனத் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
Tamil Nadu temple goes viral for giving money as prasad instead of taking donations. pic.twitter.com/8Uud7gNVXv
— ʀᴀᴍ (@ramdevkar07) May 12, 2026
இருப்பினும், இது போன்ற கிராமப்புற நாட்டுப்புறத் தெய்வ வழிபாடுகளில் சுருட்டு மற்றும் மதுபானம் படைப்பது என்பது நீண்டகாலமாக இருக்கும் ஒரு மரபு என்று சிலர் விளக்கம் அளித்துள்ளனர்.
கருப்பசாமி ஒரு காவல் தெய்வம் என்பதால், இத்தகைய சடங்குகள் இயல்பானவை என்றும் அவர்கள் பதிவிட்டுள்ளனர். ஆனால், “இது ஒரு வகையான வியாபார உத்தி, மக்களை அதிக காணிக்கை செலுத்தத் தூண்டும் செயல்” என மற்றொரு தரப்பினர் விமர்சனம் செய்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் எதிராகவும் பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
