தமிழக முதலமைச்சர் விஜய் தனது ஆஸ்தான ஜோதிடரான ராதன் பண்டிட் வெற்றிவேலை, முதலமைச்சரின் சிறப்புப் பணி அதிகாரியாக (அரசியல்) நியமித்திருந்தார். இந்த முடிவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK), இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கூட்டணி கட்சிகளே கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
மூடநம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்காமல் அறிவியல் ரீதியாக அரசு செயல்பட வேண்டும் என விசிக எம்.எல்.ஏ வாணி அரசு கோரிக்கை விடுத்தார். அதேபோல் தேமுதிக-வும் இந்த நியமனம் இளைஞர்களுக்குத் தவறான செய்தியைச் சொல்லும் எனக் கேள்வி எழுப்பியது.
கூட்டணி கட்சிகளின் அழுத்தம் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து, இந்த நியமனத்தை ரத்து செய்வதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள அதிமுக, “டிவிகே-வின் வெற்றியைக் கணித்த ஜோதிடரால், தனது பதவி பறிபோகும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாமல் போய்விட்டது; விஜய் அரசுக்குக் கெட்ட நேரம் தொடங்கிவிட்டது” என அதிமுக பிரமுகர் இன்பாதுரை கிண்டலடித்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய்க்கு நெருக்கமாக இருந்த இந்த ஜோதிடர், வாக்கு எண்ணிக்கையின் போது விஜய்யைச் சந்தித்த முதல் நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
