அதிமுகவில் கட்சிப் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி. சண்முகம் மிகுந்த ஆவேசத்துடன் தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.

பதவி ஆசை என்பது எடப்பாடி பழனிசாமியின் கண்ணை முழுமையாக மறைத்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், திமுக-வை ஒழிப்பதே அதிமுகவின் அடிப்படை கொள்கை என்றும், ஒரு உண்மையான அதிமுக தொண்டன் தனது உயிர் இருக்கும் வரை திமுக-வை எதிர்ப்பான் என்றும் முழக்கமிட்டுள்ளார்.

மேலும், தன்னிடம் எவ்வித ஆலோசனையும் நடத்தாமல் எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் முதல்வராவதை எடப்பாடி ஏற்கவில்லை என்றும், தானே முதல்வராக வேண்டும் என்பதில் அவர் பிடிவாதமாக இருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

கூட்டணிக் கட்சிகளை நடத்துவதிலும், தொகுதிப் பங்கீட்டிலும் தனது கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி உதாசீனப்படுத்திவிட்டதாகக் கூறி அதிமுக வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளார் சி.வி. சண்முகம்.