அதிமுகவில் கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி. சண்முகம், எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
“தீயசக்தி திமுக-வை ஒழிக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் அடிப்படை கொள்கை; ஆனால் பதவி ஆசை பழனிசாமியின் கண்ணை மறைத்துவிட்டது” என்று அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
மேலும், ஒரு உண்மையான அதிமுக தொண்டன் தான் சாகும் வரை திமுகவை எதிர்ப்பான் என்றும், கட்சிப் பதவி போனாலும் தனது லட்சியத்தில் உறுதியாக இருப்பதாகவும் அவர் ஆவேசமாகப் பேசினார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி நடவடிக்கையும், அதற்குச் சி.வி. சண்முகம் கொடுத்துள்ள இந்தப் பதிலடியும் அதிமுக வட்டாரத்தில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
