நாடு முழுவதும் வெள்ள பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய நீர்வள நிறுவனம், ‘வெள்ள கண்காணிப்பு’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் உயிர் மற்றும் உடைமை இழப்புகளை தடுக்க முடியும் என மையம் நம்புகிறது. இந்த செயலியின் முக்கிய நோக்கம் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு தகவல் அனுப்புவதும், அங்குள்ள மக்களை எச்சரிப்பதும் ஆகும்.

இந்த செயலி 338 நிலையங்களில் இருந்து வரும் தகவல்களைச் சரிபார்த்து மக்களை எச்சரிக்கும். இதில் துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் வெள்ள முன்னறிவிப்புகளை வழங்க, செயற்கைக்கோள் தரவு பகுப்பாய்வு, கணித மாடலிங் மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை  பயன்படுத்துகிறது.