கேரளாவை சேர்ந்த ராதாமணி அம்மாள் என்ற 71 வயது மூதாட்டி 11 வகையான வாகனங்களை ஓட்டுவதற்கான லைசன்ஸ் வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல் முறையாக 1981 ஆம் ஆண்டு நான்கு சக்கர வாகன லைசென்ஸ் பெற்றதாக தெரிவித்த அவர் படிப்படியாக கிரேன், ஜேசிபி மற்றும் அதிக கனரக வாகனங்களை இயக்குவதற்கான லைசன்ஸ் கலை பெற்றதாக கூறினார். இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் இந்த மூதாட்டி கேரளாவில் வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளியை நடத்தி வருகின்றார்.