சிம் கார்டுகள் விற்பனைக்கு மத்திய அரசு புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து சிம் கார்டு டீலர்களும், போலீஸ் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். பயோமெட்ரிக் பதிவு கட்டாயம் பெற வேண்டும் என தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார். இந்த விதியை மீறினால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் இதன் மூலம் போலி சிம்கள் விற்பனையை தடுக்க முடியும் எனவும் கூறினார்.

ஒருசிலர் பல சிம் கார்டுகளை வைத்து கொண்டு பல்வேறு சட்ட விரோத செயல்களை செய்து வருகின்றனர். இதன்காரணமாக  மோசடிகளை தடுக்கும் வகையில் காவல்துறை சரிபார்ப்பு கட்டமாயமாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.