விமானத்தில் ஒருமுறையாவது பயணம் செய்ய நினைத்தவர்களுக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் ஒரு அற்புதமான சலுகையை அறிவித்துள்ளது. ஏர் இந்தியாவின் இந்த சலுகையின் கீழ், விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் 10 முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். இது தவிர, லாயல்டி போனஸ் புள்ளிகளின் பலனையும் நீங்கள் பெறமுடியும். AIR INDIA நிறுவனம் சிறப்பு விற்பனையை தொடங்கியுள்ளது. அதன்படி, உள்நாட்டு விமானங்களுக்கான டிக்கெட்டுகள் ரூ.1470 முதல் தொடங்குகிறது.

இதேபோல், சர்வதேச விமானங்களுக்கான டிக்கெட்டுகளும் மலிவான விலையில் கிடைக்கிறது. இச்சலுகை   ஆக.20 வரை செல்லுபடியாகும். செப்.1 – அக்.31 வரையிலான பயணத்திற்கு முன்பதிவு செய்யலாம். AIR INDIA இணையதளம், மொபைல் செயலி மூலம் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.