சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளான வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதியை பொதுவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது.

இந்த வருடம் 133வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய அம்பேத்கரின் பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் மத்திய, மாநில அரசுகள் அரசு விழாவாக சிறப்பித்து கொண்டாடி வருகின்றன. இந்நிலையில் அந்த நாளை அதாவது ஏப்ரல் 14 ஆம் தேதி பொதுவிடுமுறையாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.