தமிழகத்தில் 23 வகையான வெளிநாட்டு நாய்கள், கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது இடங்களுக்கு நாய்களை அழைத்துச் செல்லும்போது கட்டாயம் சங்கிலி மற்றும் முக கவசம் அணிவிக்க வேண்டும்.

நல்ல தரமான கருத்து பட்டை அணிவித்து நாய் உரிமையாளர்கள் வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கெடுபிடிகளை நாய் உரிமையாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த கெடுபிடிகளை நாய் உரிமையாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.