வாகனங்களுக்கு பாஸ்டேக் தொடர்பான சில நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. இவை நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 இன்று முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி பாஸ்டேக் பயன்படுத்துவோர் கேஒய்சி எனப்படும் தங்களுடைய சுயவிவர குறிப்புகளை தெரிவிக்க வேண்டும். வருகின்ற அக்டோபர் 31ம் தேதிக்குள் இந்த விவரங்களை பாஸ்டேக் சேவை வழங்கும் நிறுவனங்கள் பெற வேண்டும் எனவும் இல்லாத பட்சத்தில் அந்த பாஸ்டேக் செல்லாது ஆகிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாகனம் வாங்கிய 90 நாட்களுக்குள் வாகனப் பதிவு எண் FASTAG எண்ணில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இல்லையெனில் அது ஹிட்லிஸ்ட்டில் இருக்கும். நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஜூன் மாதம் FASTAG-க்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. FASTAG சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 31 வரை அவகாசம் உள்ளது.
