பட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று காலை  நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையேற்றார். கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் மத்தியில் பேசிய அன்புமணி ராமதாஸ், “87 வயதைக் கடந்த ஐயா தற்போது மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக உள்ளார். ஆனால் அவரைச் சந்திக்க யாரும் பாதுகாப்பு விதிகளை மீறி செல்வது சரியல்ல. வீட்டில் இருக்கும் போது கூட, ஐயாவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வராண்டாவைத் தாண்டி யாரையும் அனுமதிப்பதில்லை.

ராமதாஸ் ஒரு காட்சி பொருளா? அவர் நலமாக இருக்கிறார். அவருடன் இருப்பவர்கள் சிலர் இதை நாடகமாக்கி வருகின்றனர். அவருக்கு ஏதாவது நடந்தால், அதற்குப் பொறுப்பானவர்களை சும்மா விட மாட்டேன்,” தொலைத்து விடுவேன் என்று ஆவேசமாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “கட்சிப் பணிகள் வேகமாகச் செயல்பட வேண்டும். அதற்காக 20 நாட்கள் அவகாசம் தருகிறேன். அதன் பிறகு மதிப்பீடு செய்யப்படும்,” எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்தக் கூட்டத்தில், பா.ம.க. இளைஞர் அணித் தலைவராக முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் நியமிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.