டெல்லி துவாரகா பகுதியில் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற்ற அதிர்ச்சி  சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு பயணிகளுக்காக மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட டாக்ஸியில் ஐந்து பேருடன் வழக்கறிஞர் ஒருவர் ஏற முயன்ற போது, டாக்ஸி ஓட்டுநர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் தீவிரமடைந்து, வன்முறையாக மாறியது.

இந்த சம்பவம் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த டேஷ்போர்டு கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. வீடியோவில், ஒரு பெண் உட்பட நால்வர் பின்பக்கத்தில் அமர, ஒரு நபர் முன்பக்க இருக்கையில் அமர முயன்றது, ஓட்டுநரின் எதிர்ப்புக்கு காரணமாக அமைத்தது. “இந்த வாகனம் நான்கு பேருக்கே” என்று ஓட்டுநர்  தெரிவித்த போதிலும், வழக்கறிஞர் குழுவினர் சமாதானம் பேசுகின்றனர்.

“>

 

“தயவுசெய்து பாய் போ … என்று வேண்டுகிறேன்” என வழக்கறிஞர் ஒருவர் சொல்வதும், “நீதி படித்ததைக் நீதிபதிக்கு சொல்லுங்கள்… எனக்கு சொல்ல வேண்டாம்” என ஓட்டுநர் பதிலளிப்பதும் வீடியோவில் உள்ள முக்கியமான உரையாடல்களில் ஒன்று. பின்னர், ஓட்டுநரை தவறான வார்த்தைகளால் திட்டியும், உடலில் தாக்கியும் அந்த குழுவினர் நடந்துகொண்டனர்.

இந்த வீடியோவில், டாக்ஸி ஓட்டுநரின் காலரை பிடித்துக் கத்தும் காட்சிகளும், ஓட்டுநர் வாகனத்திலிருந்து வெளியேறும்படி கோபமாக சொல்லும் காட்சிகளும் தெளிவாகக் காணப்படுகின்றன. வழக்கறிஞர் குழுவினர் அந்த பெண் இருக்கையில் அமர்ந்தபடியே ஓட்டுநரை தாக்குவதை வீடியோவில் காணமுடிகிறது . இது தொடர்பாக இதுவரை எந்தவொரு காவல்துறை நடவடிக்கையோ அதிகாரப்பூர்வ புகாரோ பதிவு செய்யப்படவில்லை என்றாலும், சமூக ஊடகங்களில் பலரும் டாக்ஸி ஓட்டுநருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வருகிறார்கள்.