ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபரும் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டுவரும் சாஹர் டுடூ (வயது 22) நேற்று தன்னுடைய நண்பர்களுடன் கோரபுட் மாவட்டத்தில் உள்ள துடூமா அருவிக்கு சென்றார். அருவியின் மையப்பகுதிக்கு சென்று டிரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சாஹர் மையப்பகுதியில் சிக்கிக்கொண்டார். அவரை மீட்க நண்பர்கள் கயிறு வீசி முயற்சித்தும் பயனளிக்கவில்லை. வெள்ளம் மோசமாக அதிகரித்த நிலையில், அவர் அருவியில் அடித்து செல்லப்பட்டார்.

“>

 

சாஹரின் நிலை என்னானது என்று தெரியவில்லை அவர்  உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தற்போது, போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் இணைந்து விரைவாக தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சாஹர் வெள்ளத்தில் அடித்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது.