உத்தரப்பிரதேச மாநிலம் காஜிப்பூரில் உள்ள ஜக்கானியா நகர சமூக சுகாதார மையத்தில் திடீரென ஆய்வு நடத்திய ஜக்கானிய எம்எல்ஏ பேடி ராம், ஊழியர்களின் வருகைப் பதிவில் பல முரண்பாடுகளை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பெரும்பாலான ஊழியர்கள் வரவில்லை என்றும், வந்தவர்கள் சிலர் கையெழுத்திடவில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து சுகாதார மைய பொறுப்பாளர் மருத்துவர் யோகேந்திர யாதவிடம் கடுமையாக கேள்வி எழுப்பிய எம்எல்ஏ, “நேரத்துக்கு வராத ஊழியர்களின் பெயரை ஏன் பதிவேட்டில் குறிப்பிடவில்லை ?” எனக் கேட்டார். இந்த வாக்குவாதத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
पियरका चाचा तो कहे ही थे कि पीला गमछा डाल कर किसी भी सरकारी दफ़्तर में जाकर चिल्लाना, कोई बाल भी बाँका नहीं कर पाएगा
सुभासपा विधायक बेदी राम जी ने अपने पार्टी सुप्रीमो की बात का मान रखा और पहुचं गए #ग़ाज़ीपुर की CHC में…
लेकिन डाक्टर भी नाक वाला था, अरदब में बिल्कुल नहीं आया… pic.twitter.com/OQxnLmENWg
— Mamta Tripathi (@MamtaTripathi80) August 22, 2025
“>
அந்த வீடியோவில், எம்எல்ஏ மருத்துவரை நோக்கி கோபமாகக் கேள்வி கேட்க தொடங்கினர். அப்போது “நீங்கள் சமாஜ்வாதி கட்சியின் நோக்கத்தில் வேலை செய்கிறீர்கள்” என்ற எம்எல்ஏவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மருத்துவர், “அது உங்கள் மாயை” என பதிலடி கொடுத்தார்.
மனமுடைந்த யாதவ், “இந்த வேலை எனக்கு பெரிய விஷயம் இல்ல, நான் ராஜினாமா செய்கிறேன்” என்று கூறிவிட்டு, கேபினிலிருந்து வெளியேறினார். அவரை எம்எல்ஏவின் உதவியாளர்கள் தடுக்க முயன்றபோதும், எம்எல்ஏ அவர் செல்லலாம் என அனுமதி வழங்கினார்.
பேடி ராம் யார்?
62 வயதான பேடி ராம், பாஜகவின் கூட்டணியான சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர். காஜிபூர் ஜக்கானியன் தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் இவர் மீது உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதில், குண்டர் சட்டம் உட்பட, வினாத்தாள் கசிவு வழக்குகளும் உள்ளன. கடந்த 24 ஆண்டுகளாக ஊழல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் பேடி ராம், இதனால் ரயில்வேயில் தனது பணியையும் இழந்துள்ளார். இந்நிலையில், அவரது திடீர் ஆய்வும், அதனுடன் ஏற்பட்ட மருத்துவர் வாக்குவாதமும் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.
