ஹைதராபாத் லோத்குண்டா பகுதியில் உள்ள சரஸ்வதி நகர் காலனியில் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி, திருமண பந்தல் அமைக்கும் பணியின்போது நிகழ்ந்த மின்சாரம் தாக்கிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவத்தின் போது பந்தலுக்கான உபகரணங்களை எடுத்து கீழே இறக்கும் பணியில் நான்கு பேர் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் ஒரு உலோக கம்பி தற்செயலாக அருகில் இருந்த உயர் அழுத்த கம்பியை தொட்டதால் இதனால் நால்வரும் மின்சாரம் தாக்கி தரையில் சாய்ந்தனர்.
Another electrical accident in Lothkunta, Trimulgherry PS . The cctv footage is disturbing and posted here only for educational purposes . I appeal to everyone to take all precautions and not be in a hurry🙏🏻 https://t.co/YgccPeaKjO pic.twitter.com/2siDqxfrER
— CV Anand IPS (@CVAnandIPS) August 23, 2025
“>
இந்த சோகமான காட்சி அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். வீடியோவில், இருவர் ஏணியில் நின்று வேலைசெய்தபோது, மற்ற இருவர் உலோக கம்பியை கீழே இறக்க முயன்றுள்ளனர். அப்போது மின்கம்பியில் தொடப்பட்டதும், நால்வரும் மயங்கி விழுந்தனர்.
அருகிலிருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து காப்பாற்ற முயற்சி செய்த போதும் , ஒருவர் உயிரிழப்பை தவிர்க்க முடியவில்லை. மூவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவரின் நிலைமை மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம், கடந்த சில மாதங்களில் ஹைதராபாத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஒன்பதாவது சம்பவமாகும். அதிலும் கடந்த ஐந்து நாட்களில் இது போன்ற நான்காவது சம்பவம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. . சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
