தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவிலும் நடித்து வருகிறார். நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் 4 வருடங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில் திடீரென விவாகரத்து செய்வதாக அறிவித்துவிட்டனர். விவாகரத்து ஆன சில காலங்களில் நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதலிப்பதாக தகவல்கள் வெளியானதோடு சில புகைப்படங்களும் லீக் ஆனது. குறிப்பாக அவர்கள் இருவரும் நெருங்கிய உறவில் இருந்ததால்தான் சமந்தா விவாகரத்து செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் நாக சைதன்யா மற்றும் சோபிதாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய instagram பக்கத்தில் போட்ட ஒரு பதிவு தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது நாக சைதன்யாத் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த பதிவை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் நடிகை சமந்தா நடுவிரலை காட்டி ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதோடு Now we are free என்ற பாடல் வரிகளையும் இணைத்துள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அதாவது நடிகை சமந்தாவுக்கு அவர் முதலில் நடித்த வெப் தொடரான தி ஃபேமிலி மேன் இயக்குனர் ராஜ் என்பவர் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் அவர் கையில் மோதிரத்துடன் போட்டோ வெளியிட்டுள்ளார். இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. இருப்பினும் சமந்தா நாக சைதன்யாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் கையில் மோதிரத்துடன் விரலை காண்பித்து இன்ஸ்ட்டா பதிவை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)