பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த சகோதரியும் நாகேஸ்வர ராவின் மகளும் ஆன நாக சரோஜா நேற்று காலமானார். அக்கினேனி குடும்பத்தை சேர்ந்த பெரும்பாலானோர் திரைத்துறையில் இருக்கும் போது சரோஜா மட்டும் விலகி இருந்தார். அதனாலையே அவரது இறப்புச் செய்தியும் தாமதமாக வெளியாகி இருக்கிறது. நாகேஸ்வர ராவ்க்கு மூன்று மகள்களும் இரண்டு மகன்களும் இருந்தனர். இதில் சரோஜா மூன்றாவது மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.