லியோ படம் சர்ச்சைகளை கடந்து நாளை வெளியாக உள்ள நிலையில், தயாரிப்பு தரப்புடன் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் லியோ வெளியிடப்படாது என சில தியேட்டர்கள் முன்பு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சி துவங்க உள்ள நிலையில், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அகமதாபாத்தில் முதல் ஷோ நள்ளிரவு 12.05 மணிக்கு திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது