நோய்டாவில் சனிக்கிழமை அதிகாலையில் சதுப்பு நிலத்தில் விழுந்த கார், சுமார் மூன்றரை நாட்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மாலை மீட்கப்பட்டது.

27 வயதான மென்பொறியாளர் யுவராஜ் மேத்தா ஓட்டிச் சென்ற அந்த கார், நள்ளிரவில் மூடுபனி மற்றும் போதிய வெளிச்சம் இல்லாததால் கட்டுப்பாட்டை இழந்து சதுப்பு நிலத்தில் பாய்ந்தது.

உதவிக்காக யுவராஜ் கூச்சலிட்டும், இரண்டு மணி நேரம் போராடியும் அவரை மீட்க முடியாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தந்தையும் காவல்துறையினரும் கரையில் இருந்தபடியே செய்வதறியாது தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) படகுகள் மூலம் பல மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தி, கரையிலிருந்து 60 மீட்டர் தொலைவில் இருந்த காரைக் கண்டறிந்தனர்.

“>

 

பின்னர் கிரேன் உதவியுடன் கார் வெளியே கொண்டு வரப்பட்டது. இந்தத் துயரச் சம்பவத்தை அடுத்து, நோய்டா ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

“>

 

மேலும், இந்த விபத்து குறித்து விசாரிக்க உத்தரப் பிரதேச அரசு சிறப்பு விசாரணை குழுவை (SIT) அமைத்துள்ளது.