கேரள மாநிலம் பாலக்காடு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி பேருந்து ஒன்றின் அவசரக்கால கதவு திடீரென கழன்று கீழே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து மாணவர்கள் மற்றும் பயணிகளுடன் வழக்கம்போல சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அதன் பின்பக்கக் கதவு தனியாகக் கழன்று நடுரோட்டில் விழுந்தது.
நல்லவேளையாக இந்த விபத்தின்போது பேருந்தின் அருகே வேறு எந்த வாகனங்களும் வராததாலும், கதவின் அருகே மாணவர்கள் யாரும் நிற்காததாலும் பெரிய அளவிலான அசம்பாவிதம் மற்றும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
#WATCH | கேரள மாநிலம் பாலகாடு அருகே சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென கழன்று விழுந்த தனியார் பள்ளி பேருந்தின் கதவு. வெளியான சிசிடிவி காட்சி#keralam #cctv #schoolbus #News18TamilNadu pic.twitter.com/hdBxlEA8Ak
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 4, 2026
“>
பார்ப்பவர்களை நெஞ்சை பதறவைக்கும் இந்த அதிர்ச்சிகரமான விபத்தின் முழுமையான சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
