தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், ஆட்சி மாற்றத்திற்காக இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுப்போம் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தொகுதி முழுவதும் நேரில் சென்று பார்வையிட்டபோது எந்தவொரு மதுபான கடையும் மூடப்படவில்லை என்றும், எல்லாம் வெறும் கண்துடைப்பாகவே இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வரை மாநிலத்தில் எதுவும் மாறவில்லை என்று கூறியுள்ள பிரேமலதா, சிங்கப்படையை விரைவில் அமல்படுத்த வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளதுடன், தற்போதைய சூழலில் சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் விவசாயிகளின் கோபம் அப்படியே நீடிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
”தொகுதி முழுக்க நேற்று சுற்றி பார்த்தேன்
எந்த மதுபான கடையும் மூடல.. எல்லாம் கண் துடைப்பு” – தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்#PremalathaVijayakanth | #DMDK | #TASMAC pic.twitter.com/N4fFH0gzb4
— PttvOnlinenews (@PttvNewsX) June 4, 2026
“>
இறுதியாக, தங்களுக்கு ஓட்டு போட்டவர்களுக்கும் போடாதவர்களுக்கும் சேர்த்து விஜய்தான் தற்போதைய முதலமைச்சர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
