சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, “நரகம் என்றால் இதுதான்” என மக்களை பதறச் செய்துள்ளது. அந்த வீடியோவில் ஒரு மனிதன் உயிருடன் இருக்கும் ஒரு பெரிய பூச்சியை எறும்புகளின் கூட்டத்துக்குள் வீசுவது போல் காட்சி அமைந்துள்ளது.

அதன் பின், ஆயிரக்கணக்கான எறும்புகள் அந்த பூச்சியை சுற்றி பிடித்து கடித்து தின்று விடுகின்றன. பூச்சி துன்பத்தில் நெளிந்து அசைந்தபடியே காணப்படுகிறது. அந்தக் காட்சி மிகுந்த கொடூரத்துடன் இருப்பதால், அதை பார்த்த நெட்டிசன்கள் பலர் “இதை நினைத்தாலே நடுக்கம் வருகிறது, தூக்கம் போய்விட்டது” என பதிவிட்டுள்ளனர்.

 

சுமார் ஒரு நிமிட நீளமுள்ள இந்த வீடியோவை,  ‘X’ தளத்தில் @Dharma0292 என்ற பயன்பாடு பகிர்ந்துள்ளார். அதற்கு அவர், “நீ மனிதனாகப் பிறந்தால் நல்ல செயல்களைச் செய்; இல்லையெனில் நரகம் இப்படித்தான் இருக்கும்” என்ற வாசகத்தையும் இணைத்துள்ளார்.

மேலும் இந்த வீடியோ இதுவரை 65,000 முறைக்கும் மேல் பார்க்கப்பட்டு, நூற்றுக்கணக்கான மக்கள் அதில் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.