தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தலை முன்னிட்டு தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் அவர் கிருஷ்ணகிரிக்கு தற்போது வருகை புரிந்துள்ள நிலையில் அவருக்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அந்த வகையில் பாஜக தலைவருக்கு சால்வை போட மாவட்ட நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

8இதனால் கோபமடைந்த பாஜக நகர பொதுச் செயலாளர் வடிவேலன் தான் வாங்கி வந்த சால்வையை நடுரோட்டில் போட்டுக் கொளுத்த முயன்றனர். மேலும் இது அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் பாஜக வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.