வெறும் 38 ரூபாய் ஆட்டோ கட்டணத்தைச் சேமிப்பதற்காக, இரண்டு பெண்கள் ஒரு ஆட்டோ ஓட்டுநரை ஏமாற்றிச் சென்ற சம்பவம் இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோவில் வந்த அந்தப் பெண்கள், குறிப்பிட்ட இடத்தில் இறங்கிய பிறகு, “சற்று நேரத்தில் திரும்பி வந்துவிடுகிறோம், இங்கே காத்திருங்கள்” என்று ஓட்டுநரிடம் கூறியுள்ளனர். அந்த உழைப்பாளியும் அவர்களை நம்பி நீண்ட நேரம் வாசலிலேயே காத்திருந்துள்ளார்.
Compassion is dead. 💔
A rickshaw driver dropped two women at
their destination. They requested him to wait outside, saying they would return soon.He kept waiting but women left through another gate without paying fare. All this just to avoid ₹20–30? You just broke his trust. pic.twitter.com/IkrVA1sQeS
— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) April 25, 2026
ஆனால், அந்தப் பெண்களோ ஓட்டுநருக்குத் தெரியாமல் அந்த இடத்தின் மற்றொரு வாசல் வழியாகத் தப்பியோடியுள்ளனர். “வெறும் சொற்பத் தொகைக்காக ஒரு மனிதரின் நம்பிக்கையை இப்படிச் சிதைக்கலாமா?” என இந்தச் சம்பவத்தைப் பார்த்த நெட்டிசன்கள் அந்தப் பெண்களைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். காசு போனால் கூட சம்பாதித்துவிடலாம், ஆனால் மனிதர்கள் மீது வைத்த நம்பிக்கை போய்விட்டால் அதைத் திரும்பப் பெற முடியாது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான உதாரணம்.
