சமீபத்தில் நடைபெற்ற தவெக மாநாட்டில், திமுகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின்  மீது கடுமையாக விமர்சனங்கள் எழுப்பிய விஜய், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கு பதிலடியாக, திமுகவினர் சமூக வலைதளங்களில் பழைய புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அதில், கருணாநிதி விஜய் குடும்பத்தாருக்கு உதவியிருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து, “நம்மால் பயனடைந்தவர்கள் நம்மிடம் நன்றி காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், “விஜய் குடும்பம் முன்னேறும் காலத்தில் கருணாநிதி மற்றும் திமுகவின் ஆதரவு தேவைப்பட்டதுதான் உண்மை. ஆனால் முன்னேறிய பின்பு அவர்களையே தாக்கி, ‘துரோகி’ பட்டம் சூட்டுவது மோசமான அரசியல்” என்று திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, புதிய அரசியல் விவாதத்துக்கு வழிவகுத்துள்ளன.