2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என தவெக தலைவர் விஜய் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். இதன் அடிப்படையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு தவெக நிர்வாகிகள் தூதுவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, கூட்டணி வைத்தால் காங்கிரசுக்கு 70 தொகுதிகள் வழங்குவதோடு, துணை முதல்வர் பதவியையும் தர தயார் என தவெக சார்பில் கூறப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. ஆனால் காங்கிரஸ் தரப்பில் இதுவரை எந்தவித உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. இத்தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழக அரசியல் வட்டாரத்தில் தவெக-காங்கிரஸ் கூட்டணி குறித்த ஊகங்கள் சூடுபிடித்துள்ளன.