திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில், புனித நீராடும் பக்தர்கள் தங்களது பாவங்கள் நீங்கும் என்ற நம்பிக்கையில் ஆற்றில் விட்டுச் செல்லும் பழைய துணிக் கழிவுகளை, கடந்த 12 ஆண்டுகளாகத் தனி ஆளாக அகற்றி வரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் சேவை பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஓய்வு பெற்ற பிறகும் தனது ஓய்வூதியப் பணத்தைப் பயன்படுத்தியும், உடல் நலத்தைப் பொருட்படுத்தாமலும் நதியைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற ஒற்றை லட்சியத்துடன் இவர் ஆற்றி வரும் பணி சமூக வலைதளங்களில் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், இயற்கையைப் பாதுகாக்கும் மக்கள் பணியில் இருந்து தமக்கு ஓய்வு இல்லை என்பதைத் தனது விடாமுயற்சியால் இவர் நிரூபித்து வருகிறார்.

தாமிரபரணியைச் சாக்கடையாக மாற்றாமல் காக்கத் துடிக்கும் இந்த ‘நிஜ நாயகனின்’ தன்னலமற்ற சேவை, பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.

“>