அமெரிக்காவில் கலிபோர்னிய மாகாணத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்த ஒருவரின் கால் பகுதியுடன் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வாஸ்கோ அம்ட்ராக் ரயில் நிலையத்தில் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

அவரின் கால் ரயிலில் சிக்கி பலமாக சேதம் அடைந்த நிலையில் உடலில் இருந்து பிரித்து எடுத்து இளைஞர் ஒருவர் அதை மோப்பம் பிடித்து சாப்பிட்டுள்ளார். இதனை அப்பகுதி மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் இந்த இளைஞனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.