உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் மனதை பதற வைக்கும் வீதி விபத்து ஒன்று நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிட்டி கோட்வாலி பகுதியில் உள்ள சிவில் லைன் சந்திப்பில், ஒரு சிவப்பு நிற கார், ஸ்கூட்டரில் சென்ற பெண்ணையும், அவருடைய இரண்டு குழந்தைகளையும் மோதியது. அதிவேகத்தில் வந்த கார் நேராக மோதியதும், மூவரும் கீழே விழுந்தனர்.

அதிர்ஷ்டவசமாக, உயிரிழப்போ பெரிய காயமோ ஏற்படவில்லை. ஆனால் விபத்துக்குப் பிறகு, அந்தக் கார் ஓட்டுநர் எந்த தயக்கமும் இன்றி காரை திருப்பி, அருகிலேயே இருந்த போலீசாரை பொருட்படுத்தாமல் ஓடிவிட்டார். இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியதும், பொதுமக்கள் போலீசாரின் செயல்பாட்டைக் கண்டித்து விமர்சிக்க ஆரம்பித்தனர். காரணம், சம்பவ நேரத்தில் போலீசார் அங்கு இருந்தும், அவர்கள் பார்வையாளர்களாக மட்டுமே இருந்ததுதான்.

“>

 

அதன்பிறகு, சாலையில் வாகனங்களை விரைந்து வழிநடத்தும் பொலிசாரே, சம்பந்தப்பட்ட காருக்கு வெறும் ₹5,500 இ-சலான் போட்டு நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவித்தனர். இது மேலும் மக்களின் கோபத்தை கிளப்பி உள்ளது. “பொதுமக்களின் உயிருக்கு மதிப்பு குறைவா?” என்ற கேள்வி சமூகத்தில் எழுந்துள்ளது.