ராஜஸ்தான் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்துக்கொண்டிருந்த பெண்ணுக்கும் சிறுவர்களுக்கும், லாரி ஓட்டுநர் ஒருவர் மரண பயத்தைக் காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற நபராக மாற வேண்டும் என்ற ஆசையில், இளைஞர்கள் பலரும் ஆபத்தான இடங்களில் வீடியோ எடுப்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே நின்றுகொண்டு, ஒரு பெண்ணும் இரண்டு சிறுவர்களும் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
அதிவேகமாக வாகனங்கள் செல்லும் அந்தச் சாலையில், தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் வாகனங்களை மறிப்பது போலவும், விதவிதமான போஸ்களைக் கொடுத்தும் அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்தச் சாலையில் ஒரு கனரக லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது. லாரி வருவதைக் கண்டும் பயப்படாமல், அந்தப் பெண் லாரியை மறிப்பது போலச் சைகை செய்து வீடியோவுக்கு போஸ் கொடுத்தார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர், வேகத்தைக் குறைக்காமல் அவர்கள் மீது மோதுவது போலவே லாரியைச் செலுத்தினார்.
कई उद्दंड रीलबाजों ने घर-मोहल्ले-गली-नुक्कड़ और सड़क पर सबको त्रस्त कर रखा है। इनसे उबे लोग जब प्रतिक्रिया दे देते हैं तो ऐसे रीलबाजों का वही हश्र होता है जो राजस्थान के इस वायरल वीडियो में नजर आ रहा है!!! pic.twitter.com/Ux5qV8DUiG
— Gyanendra Shukla (@gyanu999) January 6, 2026
கடைசி நொடியில் லாரியைச் சற்றே விலகிச் சென்ற ஓட்டுநர், அவர்களுக்கு ஒரு பாடத்தைப் புகட்டினார். கண்முன்னே மரணத்தைக் கண்ட அந்தப் பெண்ணும் சிறுவர்களும், அலறியடித்துக் கொண்டு சாலையோரம் ஓடினர்.
இந்தச் சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். “சாலை விதிகளை மதிக்காமல் விளையாடுபவர்களுக்கு இது சரியான பாடம்” என்று பலரும் லாரி ஓட்டுநரைப் பாராட்டி வருகின்றனர். அதே சமயம், இதுபோன்ற விபரீத விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
