குளிர் காலத்தின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு வழிகளைக் கையாள்வது வழக்கம். ஆனால், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடும் குளிரைத் தாங்க முடியாமல் ஒரு குடும்பமே தங்கள் கட்டிலுக்கு அடியில் நெருப்பை மூட்டிவிட்டு அதன் மேல் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் பார்ப்பதற்கே உடல் நடுங்கும் இந்தத் தற்காலிக ஏற்பாடு, அந்த அறையை வெப்பமாக வைத்திருந்தாலும், இது எந்த நேரத்திலும் ஒரு பெரும் விபத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தை சமூக வலைதளப் பயனர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
“>
இந்த வீடியோவைச் சுட்டிக்காட்டி பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “இது அசாத்தியமான துணிச்சல் அல்ல, மாறாக மிகப்பெரிய உயிருக்கே ஆபத்தான முட்டாள்தனம்” என்று பல நெட்டிசன்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் மூடிய அறைக்குள் இவ்வாறு நெருப்பை மூட்டுவதால் கார்பன் மோனாக்சைடு நச்சுத்தன்மை ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ வாய்ப்புள்ளது என்பதையும், ஒரு சிறிய தீப்பொறி படுக்கையில் பட்டால் கூட அந்த இடமே சுடுகாடாக மாறிவிடும் என்பதையும் மருத்துவர்களும் பாதுகாப்பு நிபுணர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.
