உத்தரபிரதேச மாநிலத்தின் ஒரு உணவகத்தில், ஜாவேத் என்ற நபர் தந்துாரி ரொட்டிகளைத் தயாரிக்கும் போது, அதில் தனது உமிழ்நீரைத் தடவித் தயாரிக்கும் அருவருக்கத்தக்க வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பொதுமக்களிடையே கடும் கோபமும் அதிர்ச்சியும் எழுந்தது. உணவின் புனிதத்தன்மையையும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ள இந்தச் செயல், சுகாதாரக் கேடு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

“>

இந்தச் சம்பவம் தொடர்பாகப் புகார்கள் எழுந்த நிலையில், காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு ஜாவேத்தை கைது செய்துள்ளனர். அந்த உணவகத்தின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, இதுபோன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபட கூடாது.

மேலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பொது இடங்களில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் தூய்மையை உறுதி செய்ய கடுமையான கண்காணிப்பு அவசியம் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.