ஆப்கானிஸ்தான் சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் புதுப் புதிய வீடியோக்கள் தோன்றி நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் ஆன்லைனில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ, வியப்பையும் கவலையும் ஒருங்கே ஏற்படுத்தியுள்ளது. இதில், ஒருவர் உயிருள்ள தேள்களை உருளைக்கிழங்கு சிப்ஸ்போல் மென்று சாப்பிடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோவில் ஆப்கானிஸ்தானின் ஹெராட்டைச் சேர்ந்த உள்ளடக்கத் தயாரிப்பாளர் சலார் பெஹ்சாத் இடம்பெற்றுள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கமான @salar_behzad7-ல் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். “ஹெராட்டின் தேள் சாப்பிடும் சவால்” என்ற தலைப்புடன் பதிவிடப்பட்ட இந்தக் காணொளி, அதிர்ச்சியடையவைத்துள்ளது.

https://www.instagram.com/reel/DN8WWrJjWNY/?igsh=dml4N2g5ZGI5YmNt

அந்த வீடியோவில், பெஹ்சாத் ஒன்றன்பின் ஒன்றாக உயிருள்ள தேள்களை எடுத்து, மிகுந்த தைரியத்துடன் மென்று சாப்பிடுகிறார். அவரது முகத்தில் எந்த அச்சத்தையும் காண முடியவில்லை. மாறாக, அவற்றை ரசித்து சாப்பிடும் போக்கு புலப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 1.15 லட்சத்திற்கும் அதிகமானோர் இதை லைக் செய்துள்ளனர். மேலும், 6,000-க்கும் மேற்பட்டோர் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

ஒருவர், “இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள், சகோதரரே!” எனக் கூறியிருக்கிறார். இன்னொருவர், “அரேபியர்கள் சீனக் காற்றைப் பிடித்துவிட்டது போலிருக்கிறது” என்று விமர்சித்துள்ளார். “இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?” என ஒரு நெட்டிசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதே நேரத்தில், “எதையும் சாப்பிடும் சவால்” என்ற வகையான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகமாகப் பரவத் தொடங்கியுள்ளன. இது சிறுவர்களிடம் தவறான உந்துதலை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.