அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டவிரோதமாக போதை பொருள் தயாரித்தல் மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலை ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார். அந்த வகையில் 23 நாடுகளைக் கொண்ட அப்பட்டியலில் ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவின் பெயரையும் அவர் சேர்த்திருந்தார். மேலும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதன் தயாரிப்பில் முக்கியமாக ஈடுபட்டிருக்கும் இந்த நாடுகளின் செயலால் அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி இந்த குற்றச்செயல் தடுப்பில் தவறிவிட்டதாக ஆப்கானிஸ்தான், பொலிவியா, மியான்மர் உள்ளிட்ட 5 நாடுகளை குறிப்பிட்டு இருந்த அவர், போதை பொருள் தடுப்புக்கு எதிராக தீவிரமான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு டிரம்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு போதைப் பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சேர்த்த டிரம்பின் நடவடிக்கையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
