தமிழ்நாட்டின் ‘நடிப்பு அரக்கன்’ என்று தன்னைத்தானே சமூக வலைதளங்களில் கூறிக்கொண்ட திவாகர் என்பவரை, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மேடையில் நடிகர் விஜய் சேதுபதி கடுமையாகச் சாடிய வீடியோ தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. திவாகர் நிகழ்ச்சிக்குள் போட்டியாளராகச் செல்லும்போதே, “உங்களது மொபைலில் வீடியோ எடுத்து ரீல்ஸ் போடுவது போன்ற வேடிக்கையான செயல்களை இங்கே செய்யக் கூடாது; அதற்கான மேடை இதுவல்ல” என்று விஜய் சேதுபதி எச்சரித்திருந்தார்.

ஆனால், அந்த எச்சரிக்கையை திவாகர் சற்றும் பொருட்படுத்தாமல், நிகழ்ச்சியிலும் தொடர்ந்து தன்னை ‘நடிப்பு அரக்கன்’ என்று கூறிக்கொள்வது, கேமரா முன் வந்து நடித்துக் காட்டுவது, விஜய் சேதுபதி போல் பேசி காட்டுவது என, சமூக வலைதளங்களில் அவர் பின்பற்றிய ரீல்ஸ் கலாசாரத்தை இங்கும் தொடர்ந்திருக்கிறார். இதைக் கண்டித்த விஜய் சேதுபதி, “இனியாவது கேம் விளையாடப் பாருங்கள். இது உங்களது தனிப்பட்ட ரீல்ஸ் பக்கம் அல்ல, பிக் பாஸ் மேடை!” என்று திவாகரை நேரடியாகக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். விஜய் சேதுபதியின் இந்தக் கண்டிப்பு, நிகழ்ச்சியின் விதிகள் மற்றும் போட்டியாளர்களின் பொறுப்பு குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.