இயக்குநர் ஷங்கரின் ‘அந்நியன்’ திரைப்படத்தில், நடிகர் விக்ரமை நேர்காணல் எடுக்க வரும் பிரகாஷ்ராஜ்ஜை, நடிகர் விவேக் அறிமுகப்படுத்தும் காட்சி இன்றளவும் பிரபலம். அப்போது விவேக், “இவரைத் தெரியாதா? இவர்தான் அயன்புரம் சத்திய நாராயணன்! டி.வி., ரேடியோ, செய்தித்தாள் என அனைத்திலும் கேள்வியாகக் கேட்டுக்கொண்டே இருப்பார்” என்று ஒரு கதாபாத்திரத்தை நகைச்சுவையாக அறிமுகப்படுத்தியிருப்பார். இந்தக் கதாபாத்திரம் நிஜமானதா அல்லது நகைச்சுவைக்காகக் கூறப்பட்டதா என்ற கேள்வி அப்போதே பல ரசிகர்கள் மனதில் எழுந்தது. உண்மையில், இவர் பல ஆண்டுகளாகத் திரையுலகினர் மற்றும் பிரபலங்களிடம் கேள்விகள் கேட்டுப் பிரபலமான ஒரு நிஜமான நிருபர் ஆவார்.
தற்போது, அயன்புரம் சத்திய நாராயணன், விக்ரமின் மகனான துருவ் விக்ரம் நடித்த ஒரு படம் குறித்து, “துருவ் விக்ரமின் நடிப்பு எப்படி இருக்கிறது? அவரது வெற்றி சாத்தியமாகிவிட்டதா?” என்ற ஒரு கேள்வியை எழுப்பியதுடன், அதற்கான சாதகமான பதிலையும் தானே அளித்து, அவரது நடிப்புத் திறமையைப் பாராட்டியுள்ளார். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தந்தையின் (விக்ரம்) திரைப்பட வசனத்தின் மூலம் ஒரு பிரபலமான கதாபாத்திரமாக உள்ளே வந்த அதே நபர், தற்போது அவரது மகனின் (துருவ் விக்ரம்) நடிப்பையும் பாராட்டியிருப்பது பலரின் கவனத்தையும் நெகிழ்ச்சியையும் பெற்றுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பா படத்துல வர்றவரு பையன பத்தி கேக்குறாரு.. 😁😍#அந்நியன் #ChiyaanVikram #Bison #CVF pic.twitter.com/AnbeCmYPx8
— iQKUBAL (@iqkubal) November 1, 2025
