90’ஸ் காலகட்டத்தில் ‘விரலுக்கேத்த வீக்கம்’ உள்ளிட்ட பல வெற்றிப் குடும்பப் படங்களை இயக்கியவரும், நடிகருமான வி.சேகர், திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாகக் கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் ‘பள்ளிக்கூடம்’, ‘எங்க ராசி நல்ல ராசி’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரது உயிர் காக்கப்பட அனைவரும் வேண்டிக்கொள்ளுமாறும் வி.சேகரின் மகனான கார்ல்மார்க்ஸ் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

திரையுலகில் குடும்பப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான வி.சேகரின் இந்தச் செய்தி திரையுலக வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.