நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு நிகழ்வில், போட்டியாளர்களைக் கடுமையாகக் கண்டித்து அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. நிகழ்ச்சியில் பேசிய போட்டியாளர்கள் எல்லை மீறிய வார்த்தைகளைப் பயன்படுத்தியதால், அதிக அளவில் ‘பீப்’ (Bleep) சத்தம் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதைக் கண்டிக்கும் வகையில் மேடை ஏறிய விஜய் சேதுபதி, “இதுவரை நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் எதிலும் நாங்கள் இந்த அளவிற்கு பீப் போட்டதில்லை” என்று தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அவர் கண்டித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, போட்டியாளர் கலையரசன் சிரித்ததால் மேலும் கோபமடைந்த விஜய் சேதுபதி, “என்ன ‘பீப்புக்கு’ இப்ப சிரிக்கிறீங்க? இப்படி நீங்கள் கேட்டால் உங்களுக்குக் கோபம் வருமா வராதா? ‘பீப்புக்கு’ ஏன் சிரிக்கிறீங்க? நீங்கள் உங்கள் இஷ்டத்துக்குப் பேசிக்கொண்டே போவீங்க. நீங்க எது பேசுறீங்க, என்ன பேசுறீங்கன்னு நாங்க பார்த்து பார்த்து கவனமா பீப் போடணுமா? பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து பீப் போடுவதுதான் கெத்து என நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?” எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பித் திட்டினார். விஜய் சேதுபதியின் இந்தக் கேள்விகள், நிகழ்ச்சியின் தரம் மற்றும் போட்டியாளர்களின் பொறுப்பு குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.
#Kalai went into Beep mode 🔥🔥🔥#VijaySethupathi Vaathi raid 👌👌👌#BiggBossTamil9 #BiggBoss9Tamil
pic.twitter.com/OChQkenCZd— BB Mama (@SriniMama1) November 1, 2025
