மாபெரும் வெற்றிப் படமான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Abishan Jeevinth), அந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியொன்றில் மேடையேறிப் பேசும்போது, அனைவருக்கும் முன்னால் தன் காதலை வெளிப்படுத்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. அவர் பேசுகையில், “அகிலா இளங்கோவன், உன்னை எனக்குச் சிறு வயதிலிருந்தே தெரியும். நாம் நீண்ட நாட்களாக நல்ல நண்பர்களாகப் பழகி வருகிறோம். நான் இந்த இடத்தில், இந்த நிலையில் இருப்பதற்குக் காரணமான என்னுடைய பெற்றோர்கள், நண்பர்களுக்கு இருக்கக்கூடிய அதே பங்கு உனக்கும் இருக்கிறது” என்று உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், “உன்னிடம் ஒன்றே ஒன்று கேட்க வேண்டும் எனத் தோன்றுகிறது. வருகிற அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி என்னை மணந்துகொள்வாயா?” என்று மேடையில் பகிரங்கமாகத் தன் காதலை முன்வைத்தார். இந்த எதிர்பாராத கேள்விக்கு, அகிலா இளங்கோவன் ஆனந்தக் கண்ணீரில் மௌனமாகச் சம்மதம் தெரிவித்தார். அவர் குறிப்பிட்ட அதே நாளான அக்டோபர் 31-ஆம் தேதியே இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஒரு பட விழா மேடையில் நடந்த இந்தப் பரபரப்பான மற்றும் நெகிழ்ச்சியான காதல் பிரகடனம் மற்றும் அவர்களின் திருமண வீடியோ தற்போது இணையத்தில் தீயாகப் பரவி, பலரின் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Magila Celebrity Bridal Makeup Artist (@thanushiya_bridal_studio)