பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும், அதிக ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவர்களே டைட்டிலை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கருதப்படுவது வாடிக்கை. அந்த வகையில், இந்த சீசனில் போட்டியாளரான கானா வினோத்-க்கு விக்னேஷின் (பிக் பாஸ்) ஆதரவு அதிகமாக இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்குக் கூடுதல் வலுசேர்க்கும் விதமாக, பிக் பாஸ் வரலாற்றில் இதுவரை யாருக்கும் செய்யாத ஒரு செயலைக் கானா வினோத்துக்காக பிக் பாஸ் செய்துள்ளார். நேற்று கானா வினோத் அவர்களுக்குப் பிறந்தநாள்.
பொதுவாக, போட்டியாளர்களுக்குப் பிக் பாஸ் பிறந்தநாள் வாழ்த்துக் கூறுவது மட்டுமே வழக்கம். ஆனால், நேற்று கானா வினோத் அவர்களுக்குப் பிக் பாஸ், பிறந்தநாள் வாழ்த்தைப் பாடலாகவேப் பாடி வாழ்த்தியது மிகவும் புதுமையான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் செயல் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு போட்டியாளருக்கு வழங்கப்பட்ட மரியாதை என்பதால், பிக் பாஸ் நிர்வாகத்தின் ஆதரவும் மக்கள் ஆதரவும் கானா வினோத்துக்கு அதிகமாக இருப்பதாகவும், ஆகையால் அவரே இந்த சீசனின் டைட்டில் வின்னராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
First time in BB history BB singing song for a contestant 🔥
Title winner #GanaVinoth 🏆
Darbeesu fans 🤣 #BiggBossTamil9#BiggBoss9Tamilpic.twitter.com/KQTtUiCHl3— VEER ⚔️🛡️ (@iam_pkT) October 31, 2025
