பிரபல நடிகர் விஷால் விரைவில் நடிகை லட்சுமி மேனனை திருமணம் செய்ய உள்ளதாக சினிமா வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னதாக நடிகர் விஷாலும், லட்சுமி மேனனும் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இவர்களின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. முன்னதாக, அனிஷா ரெட்டியுடன் 2019 ஆம் ஆண்டு விஷாலுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர் அவர்களின் நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.