பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் அணிந்து வரும் கைக்கடிகாரத்தின் விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து நடிகர் சல்மான் கான் புதிய கைக்கடிகாரம் ஒன்றை அணிந்து வருகின்றார். அவரது 57வது பிறந்த நாளிலிருந்து அதனை அணிகிறார். ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ள இந்த ரோலக்ஸ் கைக்கடிகாரம் தங்கத்தால் ஆனது என்றும் வைரக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதன் விலை சுமார் 46.8 லட்சம் என்று தகவல் வெளியாகி உள்ளது. சல்மான் கான் தற்போது டைகர் படத்தின் மூன்றாவது பாகத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.