2026 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி அல்லது நாகை தொகுதியில் விஜய் போட்டியிடத் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றி கழகத்தை முதலில் தென் மண்டலத்தை வலுப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளாராம். முதல் மாநாட்டை நெல்லை அல்லது தூத்துக்குடியில் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முதல் மாநாட்டில் கட்சியின் நிர்வாகிகள், கொடியை அறிமுகம் செய்யவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகம்” வெற்றி பெறுமா என்பது 2026ல் தெரியும் என்று நடிகரும், தேமுதிக நிர்வாகியுமான மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார். அரசியல் என்பது சினிமாவிற்கும் 100 படி மேல் என்று கூறிய அவர், முதல் தேர்தலிலேயே முதல்வராக வேண்டும் என்றால் எப்படி முடியும்? வாய்ப்பே இல்லை என்றார். அவர் அமைச்சர் ஆவாரா என்பதை பார்ப்போம் என்றும், சினிமாவில் போட்டி 7 பேர் தான், அரசியலில் அப்படி இல்லை எனவும் கூறியுள்ளார்