கரூரில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற நடிகர் விஜய் தலைமையிலான பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் முழு தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மேலும், இந்த நெஞ்சை உடைக்கும் நிகழ்வை தொடர்ந்து நடிகர் விஜய் தனது இரங்கலைத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார்.

இந்நிலையில், விஜய் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட பேருந்தின் முன்புறத்தில் ஏற்பட்ட ஒரு விபத்துக்கான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், சிலர் மோட்டார் சைக்கிளில் விஜய் பிரசார பேருந்தின் முன்பாக சென்று வீடியோ எடுக்க முயற்சிக்கின்றனர். அப்போது, பக்கத்திலிருந்த மற்றொரு பைக்குடன் மோதி கட்டுப்பாட்டை இழந்த அந்த பைக், நேரே பேருந்தின் சக்கரத்தில் மோதுகிறது.

இந்த விபத்தில் பைக்கில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால், அவர்களது அவசரச் செயல் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில், பொது நிகழ்ச்சிகளில் விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் குறித்து பலர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் விபத்துக்குள்ளான வீடியோவை அடிப்படையாகக் கொண்டு, விஜய் ரசிகர்களின் பொறுப்பற்ற செயல்கள் மீது சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் தொடங்கி உள்ளன.

 

https://www.facebook.com/nahubar.ali/videos/1190314132976892/?t=0