தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ஜியோ பேபி. இவர் இந்த படத்தை தொடர்ந்து காதல் தி கோர் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் மம்மூட்டி மற்றும் ஜோதிகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் நடிகர் மம்மூட்டி தன் பாலின ஈர்ப்பாளராக படத்தில் நடித்திருந்தார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் மம்மூட்டி தன் பாலின ஈர்ப்பாளராக நடித்தது பிரபலங்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் வித்யா பாலன் நடிகர் மம்மூட்டி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். அதாவது காதல் தி கோர் படத்தில் மம்முட்டி நடித்தது மிகப்பெரிய பாராட்டுக்குரிய விஷயமாகும். அவர் நடித்த கதாபாத்திரத்தை இங்குள்ள எந்த கான்களாலும் நடிக்க முடியாது. மேலும் மலையாள சினிமாவில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக இருக்கும் மம்மூட்டி படத்தில் நடித்தது மட்டுமின்றி அந்தப் படத்தை தயாரித்தும் உள்ளார். இதைவிட மிகப்பெரிய ஆதரவு தன் பாலினத்தவருக்கு இருக்குமா என்பது தெரியவில்லை. மேலும் காதல் தி கோர் படத்தை போன்று இங்கு எந்த ஒரு ஹிந்தி நடிகரும் படம் எடுக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.