தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிக படங்களில் நடித்து வருகிறார். இவர் உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஆவார். இந்நிலையில் நடிகை சுருதிஹாசன் சாந்தனு என்ற டாட்டூ ஆர்ட்டிஸை காதலித்து வந்த நிலையில் அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை ஸ்ருதிஹாசன் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருவது வழக்கம்.

ஆனால் தற்போது ஸ்ருதிஹாசன் சாந்தனுவை சமூக வலைதள பக்கத்தில் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளதோடு அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். இதேபோன்று சாந்தனுவும் ஸ்ருதிஹாசனை பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார். அதோடு சுருதிஹாசன் சிலரின் உண்மை முகங்கள் இப்போதுதான் தெரிய வருகிறது என்று பதிவிட்டுள்ளார். இதனால் ஸ்ருதிஹாசன் மற்றும் சாந்தனு பிரிந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. மேலும் இதற்கு முன்பு லண்டனைச் சேர்ந்த மைக்கேல் என்பவருடன் நடிகை ஸ்ருதிஹாசன் டேட்டிங்கில் இருந்த நிலையில் அவரைப் பிரிந்த பிறகு சாந்தனுவை காதலித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.