தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவர் இந்திய நாட்டுக்காக சிறப்பான சேவை செய்து உயிர் தியாகம் செய்தவர். நேற்று அவருடைய 10-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் அவருடைய நினைவிடத்திற்கு சென்று சல்யூட் அடித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் அவருடைய நினைவு நாளை வெளிப்படுத்தும் விதமாக சல்யூட்டிங் மேஜர் முகுந்த் என்ற தலைப்பில் படக்குழு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.