ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பீவர் மாவட்டத்தில் உள்ள செந்த்ரா ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் கரிபிரம்மா எக்ஸ்பிரஸ் கிளம்பியது. அப்போது அந்த ரயிலின் என்ஜினில் திடீரென தீ பற்றி எரிந்ததால், லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.

இதனால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு ரயிலில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சில மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஷார்ட் சர்க்யூட் அல்லது தொழில்நுட்ப கோளாறின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே இந்த விபத்தின் காரணமாக அந்த ரயில் நிலையத்தின் வழியாக வரும் ரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து என்ஜினில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணம் குறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் அந்த ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.